என்னது!!.. இந்த சூப்பர் ஹிட் ரஜினி பாட்டை முதலில் நிராகரித்தார்களா??!!
80களின் இறுதி
மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளில் ஒருவர் இயக்குநர் ஆர் வி உதயக்குமார்
அவர்கள். இயக்குநர் ஆபாவாணனிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் தனியாக படங்கள் இயக்க
ஆரம்பித்து 90களின் மத்தியில் அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் ஆஸ்தான இயக்குநராக வலம்
வந்தவர் இவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் என்று இவருடைய இயக்கத்தில்
நடித்த அத்தனை நடிகர்களின் படங்களும் சக்கை போடு போட்டன. ஃபேமிலி ஆடியன்ஸ்களின் விருப்ப
படங்களாக இவருடைய படங்கள் அமைந்தன. சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், ராஜகுமாரன், நந்தவனத்தேரு
இப்படி பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இவர் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்திற்காக இயக்கிய எஜமான் படத்திலும் பாடல்கள் பட்டையை கிளப்பின. இந்த படத்தின்
பாடல் கம்போஸிங்கிற்காக இவர் பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கே இளையராஜாவின்
உதவியாளர் ஒருவர், ‘சார், ராஜா சார் இன்னொரு இயக்குநருக்காக போட்ட ட்யூன் ஒண்ணு இருக்கு…,
ஆனா அந்த இயக்குநர் அந்த ட்யூன வேணாம்ன்னு சொல்லி வேற ட்யூன வாங்கிகிட்டாரு, நீங்க
அந்த ட்யூன கேட்டுப்பாருங்களேன்’ என்று சொல்லியிருக்கார். ‘அப்படியா!! போடுங்க’ என்று
சொல்லி அந்த ட்யூனைக் கேட்ட ஆர் வி உதயக்குமார் பரவசமாகி ‘அருமையா இருக்கு…, இந்த ட்யூன
கண்டிப்பா நான் வாங்கிக்கிறேன்.., இந்த ட்யூனுக்காகவே படத்துல ஒரு சிச்சுவேஷன வைக்க
போறேன்’ என்று சொல்லி அந்த ட்யூனை எஜமானில் பாடலாக்கி இணைத்தார். ரஜினியும், மீனாவும்
ஆடிப் பாடி நடித்து, இன்று வரை பல கோடி தமிழ் ரசிகர்களின் விருப்ப பாடலாக ஒலித்துவருகின்ற
‘ஆலப்போல் வேலப்போல்’ தான் அப்பாடல்.
மெலோடியஸ் ரக பாடல்களின்
வரிசையில் இன்றைக்கும் இந்த பாடலுக்கு முக்கிய இடம் உண்டு. இளையராஜாவின் மந்திர இசைக்கோர்ப்பில்,
SP பாலசுப்ரமணியம் மற்றும் சித்ராவின் மயக்கும் குரல்களில் இந்த பாட்டு கேட்கும் எவரையும்
சொக்கிவிடவைக்கும்.
மீண்டும் ஒருமுறை,
இந்த தகவல்களோடு பாட்டை கேட்டுப்பாருங்கள், உங்கள் செவிகள் ஆயிரம் மயில் இறகுகளால்
வருடப்படுவது அதிக நிச்சயம்!!





Comments
Post a Comment