பாடலை நிராகரித்தார் ஒரு இயக்குநர் – அப்பாடலில் ஹிட்டடித்தார் ஒரு இயக்குநர் – என்ன பாடல் அது?! தெரிந்து கொள்ள படியுங்கள்
1982 ஆவது
வருடம் இளம் இயக்குநர் ஒருவரின் வரவால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய விருந்து காத்திருந்தது, அதுவும் அந்த ரசிகர் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் என்னும் செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. அவர் தான் இயக்குனர் ஆர் சுந்தரராஜன். இவர் இயக்குனர் பாக்யராஜின் நெருங்கிய நண்பர். அது மட்டுமல்லாமல் இளையராஜா என்னும் அந்த மந்திர சொல்லின் மீது பெரிய ஈர்ப்பைக் கொண்டிருந்தவர். இளையராஜாவை பார்க்க வேண்டும், பேசிவிட வேண்டும் என்பதற்காகவே சினிமா இயக்க ஆசைப்பட்ட நபர் இவர். எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணிபுரிந்த முன் அனுபவம் இல்லாமலேயே படம் இயக்கியவர் இவர். முதல் படம் ‘பயணங்கள் முடிவதில்லை’. மோகனும், பூர்ணிமாவும் நாயகன், நாயகியாக நடிக்க இளையராஜாவின் இசையில் படம் வெள்ளி விழா கொண்டாடியது.
இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த பாடல் இந்த படத்திற்காக உருவாக்கப்படவில்லை. ஆம், ஆச்சரியாயிருக்கிறதல்லவா?! இப்பாடலின் ராகம், இயக்குனர் பாலு மஹேந்திராவின் ‘மூடுபனி’க்காகத்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. படத்தில் தேவைப்படும் சூழ்நிலைக்கு இந்த ட்யூன் துல்லியமாக பொருந்தாததால் இந்த பாடலை நிராகரித்துவிட்டாராம் பாலு மஹேந்திரா. இந்த பாடலைத்தான் தன்னுடைய படத்தில் கேட்டு வாங்கி வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர் சுந்தரராஜன். இன்னும் சொல்லப்போனால், இந்த பாட்டிற்காகவே சிச்சுவேஷனை உருவாக்கி, நாயகன் மோகன் கித்தாரோடு பாடலை பாடும்படியாகவும், அதனை கதாநாயகி பூர்ணிமா ரசித்து கேட்கும்படியாகவும் காட்சிகள் அமைக்கபட்டிருக்கும்.
பாடலின் இசைகோர்ப்பிலும் கித்தார் இசையே பிரதானமாக இடம்பிடித்திருப்பதால், இப்பாடலை கேட்கும் போது ததும்பும் ஒரு இளமை துடிப்பை இன்றும் நம்மால் உணரமுடியும்.





Comments
Post a Comment