பாடல் பதிவில், பிரபல பாடகருக்கு கிடைத்த ‘ஷாக்’: வருத்தத்தோடு வெளியேறிய சோகம்!!!

பிரபல இயக்குநர் மணிரத்னம் இந்திய அளவில் பெயர் பெற்றவர். இவருடைய படமென்றால், ஷாருக்கானென்றாலும், ஐஸ்வர்யா ராயென்றாலும் யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்துவிடுவார்கள். ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானை ரோஜா திரைப்படத்தின் மூலம் இசை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இயக்குநர் மணிரத்னத்தையே சாரும். உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் மகளான நடிகை சுஹாசினியை மணிரத்னம் திருமணம் செய்து கொண்டார்.


நடிகை சுஹாசினியின் முதல் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ‘இந்திரா’. பெண்மையை போற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மற்றொரு அண்ணனும், சுஹாசினியின் சித்தப்பாவுமாகிய சந்திரஹாசனின் மகள் அனுஹாசன் கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக அரவிந்தசாமி நடித்திருப்பார். இப்படத்திற்கு இசை ஏ ஆர் ரகுமான். பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. முக்கியமாக ‘நிலா காய்கிறது’, ‘அச்சம் அச்சம் இல்லை’, ‘ஓட்டக்கார மாரிமுத்து’ போன்ற பாடல்கள் அக்காலகட்டத்தில் மக்கள் விருப்பப்பாடல்களாக, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒலித்து வந்தன.


இப்படத்தின் பாடல்களில் ‘தொட தொட மலர்ந்ததென்ன’, 90களின் மிகச் சிறந்த காதல் பாடல்களில் ஒன்று. எஸ் பி பாலசுப்ரமணியமும், சித்ராவும் இணைந்து பாடியிருந்த இப்பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியிருந்தார். தன்னுடைய தேன் குரலால், காதல் ரசம் வழிய எஸ் பி பாலசுப்ரமணியம் பாடின இப் பாடலை முதலில் பாடியிருந்தவர் பாடகர் உன்னி கிருஷ்ணன். 


அந்த படத்தின் இயக்குனர் இப்பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் உன்னி கிருஷ்ணனுக்கு பதிலாக எஸ் பி பாலசுப்ரமணியம் வரவழைக்கப்பட்டு இந்தப் பாடல் பதிவானது. இதனை உன்னி கிருஷ்ணனே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.


Comments