T M சௌந்திரராஜனை அவமதித்த இளையராஜா – வாய்ப்புகளை இழந்த காலக்கொடுமை : தெரிந்துகொள்ள படியுங்கள்…

காந்தக்குரலோன் டி எம் சௌந்திராஜன் அவர்கள் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு குரல் கொடுத்தவர். இவர்கள் மட்டுமல்லாது எஸ் எஸ் ஆர், முத்துராமன், ஏ வி எம் ராஜன், நாகேஷ், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், அசோகன், ரவிச்சந்திரன் என ரெட்ரோ கால தமிழ் கதாநாயகர்கள் அனைவருக்குமே இசை குரலாக ஒலித்தது டி எம் சௌந்திரராஜனின் குரலே. இவருடைய தனிச்சிறப்பே எந்த நடிகருக்கு இவர் பாடினாலும், திரையில் அந்த நடிகரே தன் குரலில் பாடுவதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு அற்பணிப்பு மிகுந்த பாடகர் டி எம் சௌந்திரராஜன். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். 70களின் இறுதி வரை தமிழ்த் திரையுலகம் உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து இவரை அழகுபார்த்தது. 


அக்காலகட்டங்களில் இவரை தன் படங்களில் பாடவைக்காத இசையமைப்பாளர்களே இல்லையெனலாம். மாற்று விருப்பமே இல்லாத வண்ணம் சினிமா தயாரிப்பாளர்களின் ஒரே தேர்வாக இருந்தவர் டி எம் சௌந்திராஜன் மட்டுமே. காதல் பாடல்களோ, சோகப்பாடல்களோ, வீரத்தை முழங்கும் பாடல்களோ, தத்துவப்பாடல்களோ, எதுவானாலும் அதர்கேற்ற பாவங்களை அட்சரம் பிசகாமல் குரலில் கலந்து பாடலை பரிமாறுவது டி எம் சௌந்திராஜனின் வியக்கவைக்கும் சிறப்பம்சம். பாடல் பதிவு, மேடைக் கச்சேரி, நடிப்பு, நாடகம் என பலதரப்பட்ட துறைகளிலும் ஜொலித்தவர் டி எம் சௌந்திராஜன்.

70களின் மத்தியில் இளம் இசையமைப்பாளர்களின் படையெடுப்பு தமிழ் சினிமாவில் அதிகரித்தது. இளையராஜா சகோதரர்களின் வரவு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தொடங்கி வரிசையாக அவர் இசையமைத்து வந்த படங்கள், பாடல்களுக்காகவே வெற்றியடைய தொடங்கின. அன்றைய இளம் நாயகர்களான கமல், ரஜினி தொடங்கி அனைவருடைய விருப்பத் தேர்வாக இளையராஜா இருந்தார். அதுமட்டுமல்லாமல் 70களில் பாரதிராஜா, பாலு மஹேந்திரா, பாக்யராஜ், என பல இளம் இயக்குநர்கள் எழும்பினார்கள். எதார்த்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு மவுசு அதிகரித்தது. அதனால் ஸ்டூடியோவில் செயற்கை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்திய நிலை மாறி மக்களின் வாழ்விடங்களுக்கே சென்று படம்பிடித்தார்கள் இந்த இயக்குநர்கள். எம் ஜி ஆர் நடிப்பதை நிறுத்தி அரசியலில் இறங்கினார். சிவாஜி கணேசனோ கதாநாயகனாய் நடிப்பதை குறைத்து குணச்சித்திர பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார். இதனால் டி எம் சௌந்திராஜனுக்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ் ஆகிய இளம் பாடகர்களுக்கு மவுசு அதிகரித்தது. கமலுக்கும், ரஜினிக்கும் இவர்கள் இருவரே பெருபாலான பாடல்களைப் பாடினார்கள்.

இந்நிலையில்தான் ‘நான் வாழ்வைப்பேன்’ என்னும் படம் 1979இல் வெளியானது. இதில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்திருப்பார், ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். இளையராஜாவின் இசையில் கே ஆர் விஜயா இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒரு பாடல் மட்டுமே டி எம் சௌந்திராஜனுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக சிவாஜி அவர்களின் படமென்றால் அனைத்துப் பாடல்களையுமே டி எம் சௌந்திராஜன்தான் பாடுவார். ஆனால், இப்படத்திலோ எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ் ஆகியோருக்கு மற்ற பாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இப்படத்தில் டி எம் சௌந்திராஜன் பாடியிருந்த எந்தன் பொன்வண்ணமே என்னும் பாடல்தான் இளையராஜா இசையில் டி எம் சௌந்திராஜன் சிவாஜிக்கு பாடின கடைசிப் பாடல். பாடல் பதிவின்போது இளையராஜாவுக்கும், டி எம் சௌந்திராஜனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் இளையராஜா ‘என் இசையில் டி எம் எஸ் அண்ணன் பாடுற கடைசி பாட்டு இதுதான்’ என்று எல்லாரிடமும் தீர்க்கமாக கூறிவிட்டாராம். இந்த நிகழ்வில் தொடங்கி பாடகர் டி எம் சௌந்திராஜன் அவர்களுக்கு வாய்ப்புகள் இறங்குமுகமானது.         


Comments